திருநெல்வேலி, ஜூலை.4:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, INTERSHIP எனப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி [பணி அனுபவ பயிற்சி] முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று [ஜூலை.4] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் போது, தொழில் முனைவோருக்கு தேவையான அரசு திட்டங்கள் பற்றியும், புத்தாக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டு, பயிற்சியாளர்கள் தெரிந்து கொண்டு, பயன் பெற்றனர்.
முதற்கட்டமாக நெல்லை வண்ணார் பேட்டை F.X.கல்லூரி, பாளையங்கோட்டை ரகுமத்நகர் சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சி கல்லூரி மற்றும் முகம்மது இஸ்மாயில் I.T.I.ஆகிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த 7 மாணவ- மாணவிகளுக்கு, பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் வழங்கி, பாராட்டும்-வாழ்த்தும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மேலாளர் மு.சிவ பாரதி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
