Headlines

மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா…

மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா...

02-02-2026, ​கோவை:
​கோவைமாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

​இவ்விழாவில் 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான திரு.பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில்,கோவை 80-வது வார்டில் மட்டும் இதுவரை 967 மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியுள்ளது.

என்று கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


“தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல், பள்ளிக்கல்வித் துறையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில் எந்தத் தடங்கலும் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

​நமது 80-வது வார்டில் மட்டும், திமுக அரசு அமைந்த பிறகு இதுவரை:
​செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 461 மிதிவண்டிகளும், ஒக்கிலியர் காலனி மேல்நிலைப் பள்ளியில் 506 மிதிவண்டிகளும் என, ​மொத்தம் 967 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

​இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; 967 குடும்பங்களின் கல்வி வளர்ச்சியில் திமுக அரசு ஏற்றியுள்ள ஒளிவிளக்கு.

மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட அரசாக நமது திமுக அரசு செயல்படுகிறது,” என்று புகழாரம் சூட்டினார்.

​இந்நிகழ்வில் பள்ளி உதவி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, பகுதி கழகப் பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், வட்டக் கழக செயலாளர் நா.தங்கவேலன் , வட்டக் கழக பொறுப்பாளர்கள் ராஜேஷ் கோபிநாத் ராஜேஷ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *