கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.09.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும்,
குற்றங்களை தடுப்பது,
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, போக்சோ வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல்,
திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் மாதத்தில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் IPS அவர்கள் வழங்கிய கேடயத்தை நாகர்கோவில் பொறுப்பு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பச்சமால் பெற்றுக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
