Headlines

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.11:-

கிராமப்புற மக்கள் தங்களுடைய உரிமைகளை அறிந்திடவும், தங்களுடைய தேவைகளை கோரி பெற்றிடவும், ஆண்டு தோறும் தமிழ்நாட்டில், ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1- ஆகிய ஆறு முறைகள், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தவிர, சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும், நடத்தப்படுகின்றன.

அதன் அடிப்படையில்,”காந்தி ஜெயந்தி” தினத்தில் (அக்டோபர். 2) நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்கள், நிர்வாக காரணங்களுக்காக, இன்று (அக்டோபர். 11) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன.

“முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின், “காணொளி காட்சி” வாயிலாக இணைந்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், “மக்களாட்சியின் அடிப்படைக்கு, கிராம சபைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை வலியுறுத்தியதுடன், மக்களின் தேவைகள், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, ஊரக வளர்ச்சித்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்!”- என்று, அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ஒவ்வொரு கிராமத்தையும் மேம்படுத்தவதற்கான, மூன்று அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்து, அவற்றிற்கு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென, கேட்டுக் கொண்டார்.

சமூக நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு, இழிவு படுத்தும் பொருள்கள் தரும் சாதிப்பெயர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது இடங்கள் ஆகியவற்றில் அவற்றை நீக்கி, புதிய பொருத்தமான பெயர்களை, சூட்ட வேண்டும்!”-என்று, யோசனை தெரிவித்தார்.

முதலமைச்சரின், “காணொளி காட்சி கலந்துரையாடல்” நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்தந்த ஊர்களில் கிராம சபை கூட்டங்கள், நடைபெற்றன.

அதன்படி, திருநல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர். மனோகரன் ஆகியோர், கலந்து கொணடனர்.

இந்த கூட்டத்தில், “நம்ம ஊரு, நம்ம அரசு!” என்னும் தலைப்பின் கீழ், கண்டறியப்பட்ட திட்டங்கள், தேவைகள் ஆகியன, பதிவேற்றம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுப்பது குறித்தும், பொது செலவினங்கள், தணிக்கை அறிக்கை ஊரக வேலை உறுதி அளிப்புத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், மழைநீர் சேகரிப்புத்திட்டம்,வட கிழக்கு பருவமழை துவங்க இருப்பதையொட்டி, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன உள்ளிட்ட 16தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.

இந்த கூடடத்தில், மாவட்ட ஆட்சியருடன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் டாக்டர் சரவணன், மாவட்ட சமூகநல அலுவலர் தாஜூன்னிசா பேகம், முனைஞ்சிப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் இசக்கி துரை, நாங்குநேரி வருவாய் வட்டாட்சியர் பால கிருஷ்ணன் ஆகியோரும், கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – மேலப்பாளையம் ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *