Headlines

கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.

கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.

ரூ 55.40 கோடியில் நடைபெறும் எஸ்.ஐ. ஹெச் எஸ் ரயில்வே கடவு மேம்பாலம் ஆகஸ்ட் மாதம் முடிவடையும்.

ஆய்விற்கு பின் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்
Ex. எம்எல்ஏ., பேட்டி

கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த பாலம் அமைக்கும் பணிகளை இன்று 30-7-2025,புதன்கிழமை காலை 11.00 மணியளவில்,மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்
ex. எம்எல்ஏ.,.பார்வையிட்டார்.

அவருடன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி, உதவி பொறியாளர் ஹரிபிரசாத்,கழக நிர்வாகிகள் *நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதன் பிறகு, நிருபர்களிடம் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கூறியதாவது.

சிங்காநல்லூர் எஸ் ஐ. எச். எஸ் காலனி பகுதி சுற்றுவட்டாரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கு உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வசதியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடந்தன.
ஆனால் அதன் பிறகு 10 ஆண்டுகாலம் இத்திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சி 2021 இல் அமைந்ததும் கழகத் தலைவர் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் சர்வீஸ் சாலை அமைக்க 29 கோடி நிதி ஒதுக்கினார்.

2016 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நான் சட்டமன்ற கூட்டங்களில் தொடர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினேன். அதன் பிறகு மீண்டும் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு.எவ.வேலு,மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு.வி.செந்தில் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தனர்.

இத்திட்டத்தில் சர்வீஸ் சாலை அமைக்க மற்றும் நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு ரூ55. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதன் பிறகு இந்த பணிகள் தீவிரமாக நடந்தன.
இன்று அதிகாரிகளுடன் இந்த பணிகளை பார்வையிட்டோம். ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடித்து விடுவார்கள். கழகத் தலைவர் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பாலத்தை விரைவில் திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில்,திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் வெ.சசிகுமார்,ஒண்டிப்புதூர் பகுதி திமுக பொறுப்பாளர் கஸ்தூரி அருண்,வட்டக் கழகச் செயலாளர் ராஜேந்திரன்,பகுதி அவைத்தலைவர் என். டி. சின்னச்சாமி,சி.எம்.வேலுமணி,தம்பு, கனகராஜ்,பட்டாசு பாலதண்டாயுதம், சிவா,ஆ. சதீஷ் குமார்,சுப்பிரமணி,ஜம்பு,ஆட்டோ சண்முகம்,வெங்கடேஷ்,முத்துவேல்,இளைஞரணி அன்பு, பிரேம்,கார்த்திக், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர்,:சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *