திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் திரு. அமுதன், காஜி கமிட்டி குழு உறுப்பினர்கள் வாணியம்பாடி காதர் பேட்டை மஸ்ஜித் முத்தவல்லி, வானிடெக் சேர்மன், HB Foundation (Educational), சமூகக் கொடையாளர் ஜனாப். இஸ்தியாக் அஹமத் B.A, சமூக சேவகர், சமூக செயற்பாட்டாளர் திருப்பத்தூர் அ.சா.அலாவுதீன். D.Pharm, துணை காஜி, வாணியம்பாடி பஷீரா பாத் இமாம் , சமூக அக்கறையாளர் மெளலவி. முஸ்தாக் அஹமத் மாதனி உள்ளனர்..