திருநெல்வேலி,நவ.19:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த விழா நடைபெற்றது.
வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பொன் பாண்டியன் தலைமையில், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் “லயன்” அருள்தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், “சிறப்பு அழைப்பாளர்களாக” “திசையன்விளை” விவேக் முருகன், “தணக்கர்குளம்” பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை ஆகியோர், கலந்து கொண்டனர். இவர்களுடன், வள்ளியூர் நகர காங்கிரஸ் பொருளாளர் ஜி.டி. மார்சல், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜான் கென்னடி, ஆசிரியர்கள் சேவியர், ஆறுமுகம், அண்ணா நகர் தில்லை, வள்ளியூர் பஞ்சாயத்து கவுன்சிலர் நகர காங்கிரஸ் செயல் தலைவர் சசிகுட்டன், நகர காங்கிரஸ் துணை தலைவர் மாருதி ராஜா, வடலிவளை காமராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்