Headlines

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 29.

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் தன்னிகரில்லாத மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது.

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அறநிலையத்துறைத் தலைவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், இதயவியல் நிபுணர் மருத்துவர் சங்கர தியாகராஜன், மருத்துவர் தமிழரசன், மருத்துவர் அன்பரசன், மருத்துவர் தினேஷ் கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பேரணியின் தொடக்கத்தில் பேசிய மருத்துவர் அன்பரசன், இன்றிலிருந்து ஒவ்வொரு தனிநபருடம் நடைபயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்றும், நடைபயிற்சியின் பயனாக இதயத்தில் சீரான இரத்த ஓட்டம் நடைபெறும் என்றும், இதயம் சிறப்பானதாக செயல்பட்டால் மனித வாழ்வும் நோயில்லா வாழ்க்கை பெற்று மனித வாழ்க்கையில் பெறும் மகிழ்ச்சி பெறுவர் என்றும் தெரிவித்தார்.

நடைபயிற்சியின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி நடைபெறுவதாக தெரிவித்தார். தென்காசி பேருந்து நிறுத்ததில் இருந்து தொடங்கிய பேரணியில் சாந்தி பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், குற்றாலம் பராசகத்தி தன்னாட்சி கல்லூரி மாணவ, மாணவிகள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பேரணி தென்காசி பேருந்து நிலையத்தில் புறப்பட்டு, பெரிய கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், பேருந்து டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர்.

தென்காசியில் முதன்முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரிபெரல் ஆஞ்சியோகிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *