Headlines

நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஏழு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக ஒரே பெயரில் இயங்கிட முடிவு செய்து,
அதன் அடிப்படையில் உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை கூட்ட அரங்கில் இன்று 3 -6- 2025 – செவ்வாய்க்கிழமை பகல் 12. 15 மணியளவில் ஏழு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு ஒத்த கருத்து அடிப்படையில் #ஆரிகவுடர் #விவசாயிகள்_சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

பசுந்தேயிலை, மலை காய்கறிகள், தோட்டக்கலைத் துறை பயிர்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளின் நலனுக்கான சங்கமாக #ஆரிகவுடர் #விவசாயிகள்_சங்கம் இயங்கிட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இன்று முதல் விவசாயிகளின் நலனுக்கான கோரிக்கையை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆரிகவுடர் விவசாய சங்கத்தை முன்னிறுத்தி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆரிகவுடர் விவசாயிகள் சங்கத்திற்கு 21-பேர் பதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக மஞ்சக்கொம்பை ஊரைச் சேர்ந்த திரு. மஞ்சை, வி. மோகன். துணைத்தலைவர்களாக இளித்துறை என். விஸ்வநாதன், கேத்தி பாலாடா, கே. ராமச்சந்திரன், தொரையட்டி திரு. கே. போஜன், கூடலூர் திரு. ஷாஜி, முட்டிநாடு திரு. ஜே. பிரபுராஜ் ஆகியோர்களும், பொதுச்செயலாளராக நுந்தளா, பி. வேணுகோபால், இணைச்செயலாளர்களாக குந்த சப்பை, பி. நடராஜ், கரிமொரா, கே. பி. ரவி கீழ்குந்தா, மகா மகா பெள்ளியப்பா, ஊட்டி திரு. கே. பிரகாஷ், கன்னேரிமுக்கு திரு.கக்கி சண்முகம், மேல்குந்தா, பூபதி கண்ணன், ஆகியோர்களும், பொருளாளர் ஆக, எடக்காடு நடுஹட்டி, எஸ். மகாலிங்கம், அமைப்புச்செயலாளராக, அப்புக்கோடு, பி. நடராஜன், மகளிர்அணி_செயலாளராக, பேரகனி, விமலா மொர்ச்சன், செயற்குழ_உறுப்பினர்களாக, குருத்துக்குளி கே. முருகன், கேர்பெட்டா, ஆர். கிருஷ்ணமூர்த்தி, பெம்பட்டி திரு கே. வாசு, கூடலூர், கே. ரகுநாதன், ஆடத்துறை திரு மோத்தீஷ் ஆகியோர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு மஞ்சை. வி. மோகன் ஏற்புரை வழங்கினார். கூட்டத்தின் முடிவில் ஆரிகவுடர் விவசாயிகள் சங்கத்தை முறையாக பதிவு செய்திட வேண்டும் என்றும், வரும் செப்டம்பர் மாதம் 12 13 14 தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும். உலகளாவிய இயற்கை விவசாய மாநாட்டில், நீலகிரியில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொள்வது எனவும், இக்கூட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை பெறுவதற்காக மாநாட்டு குழுவினரை அழைத்து விவசாயிகள் சந்திப்புகூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தினுடைய அனைத்து பகுதிகளுக்கும் நிர்வாகிகள் நேரடியாக பயணம் செய்து அதிகப்படியான விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பது என்றும், நீலகிரி மாவட்டத்தின் ஆறு தாலுகாவிலும் விவசாயிகள் பொது சேவை மையத்தினை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது

முன்னதாக. பி.நடராஜன் வரவேற்புரையாற்றினார். முடிவில் திரு மகா மகா மகா பெள்ளியப்பா நன்றியுரை கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *