திருநெல்வேலி,நவ.8:-
முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது.
இதனை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், “குத்து விளக்கு” ஏற்றி,துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு,பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு இயல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதயநோய், நரம்பு இயல், தோல்நோய், பல், கண், காது- மூக்கு- தொண்டை, மனநலம், இயன்முறை, காசநோய், நீரிழிவு, ஆயுஷ் ஆகிய பிரிவுகளில், முகாமிற்கு வருகை தருவோருக்கு, அவரவர் தேவைக்கேற்ப, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், வழங்கப்பட்டன.
ஸ்கேன் வசதி மறறும் முழு உடல் பரிசோதனை செய்யும் வசதியும், இந்த முகாமில் இடம்பெற்றிருந்தன. மேலப்பாளையம், குறிச்சி, அழகிரிபுரம், குலவணிகர்புரம், நாகம்மாள்புரம், நடராஜபுரம், சிவராஜபுரம், பாரதியார்புரம், நாச்சியார் காலனி, ராஜாநகர், ஹக்நகர், தாய்நகர், ஞானியார் அப்பா நகர், ஹாமீம்புரம், சம்சுதாசீன்நகர், நேருநகர், சித்தீக்நகர், பூங்காநகர், பாத்திமாநகர், ரகுமானியாபுரம், BSNL நகர், நபிநகர், கருங்குளம், கீழப்பாளையம், பிறைநகர் உள்ளிட்ட, ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து, திரளான மக்கள் இந்த முகாமில், பங்கேற்று பயன்பெற்றனர்.

முகாமில், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. முகாமில், திருநெல்வேலி அரசு மருத்துவககல்லூரி முதல்வர் டாக்டர் சி. ரேவதி பாலன், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் விஜயசந்திரன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லதா, மாநகர நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராணி ஆகியோரும், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
