நாகர்கோவில், ஜன.18 :
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (18.01.2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஆகியோர் முன்னிலையில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
மேலும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுவுடமை வீரரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது, பொதுவுடமை, சமூக நீதி மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ப.ஜீவானந்தத்தின் தியாகமும் சேவையும் நினைவுகூரப்பட்டு, அவரது கொள்கைகள் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பதாகப் பேசப்பட்டது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
