திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் 16/10/2025 அன்று நடைபெற்றது.
தமிழ் வர்ணன் தலைமையில், ஆசிரியர் அமைப்பை சேர்ந்த தங்கவேல்,குமார், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியன் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அம்சராஜ், தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது..
