மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த லோடுமேன் ராஜாராம் என்பவரும் படுகாயமடைநத நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொலையில் கஞ்சா வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளது என அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், டி.எஸ்.பி. சந்திரசேகரன் ஆய்வு செய்தனர். இறந்த முத்துக்குமார் 2009ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி