திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எரிசனம்பட்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்வில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் எரிசனம்பட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
