நாகர்கோவில்:
குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
மொத்தம் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கோவை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்டவை—இந்தப் போட்டியில் பங்கேற்றன.
விஜய் வசந்த் எம்.பி போட்டியை துவக்கி வைத்தார்.., குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர் போட்டியாளர்கள் போல தரையில் அமர்ந்து விளையாடிய மனிதநேய சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்தது.
சமூக அக்கறை மிக்க தருணம் – மாற்றுத்திறனாளிகளிடையே பாராட்டு விஜய் வசந்தின் இந்த செயல்,
மாற்றுத்திறனாளி வீரர்களின் மனஉற்சாகத்தை உயர்த்தியதோடு, நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்., இந்த விழாவில்: நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உட்பட பல அரசியல் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
