கோத்தகிரி, அக்டோபர் 24:
பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோத்தகிரி HRM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டம், மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. தருமன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய A. பி. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார்.
செயற்குழு உறுப்பினர் இட்டகல் போஜராஜன் முனனிலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மாவட்ட அளவிலான அமைப்பு முன்னேற்றம், வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை, சமூக ஊடக செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், பிரிவு தலைவர்கள், இளைஞரணி மற்றும் மகளிரணி பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்றணர்.
