ஆக் 29, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் நேற்று சோகமான விபத்து ஏற்பட்டது.
ஒரே பைக்கில் மூன்று பெண்கள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், எதிரே வந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், மூவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், இரு பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரின் நிலை உயிருக்கு ஆபத்தானதாக இருந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கன்னியாகுமரி நகராட்சி நிருபர் : செலிஸ்
