திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய ஆவின் சேர்மன் ஆறுமுகம் பரிசு வழங்கினார், கல்லை மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், ஒன்றிய ஆவின் பெருந்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராசன், சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கையற்கண்ணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவள்ளுவர் தின உரையாற்றினார்,தலைமையாசிரியர் வெங்கடேசன், தொழிலதிபர் கதிரவன், ஆசிரியை கலைச்செல்வி,இன்னர்வீல் கிளப் தீபா சுகுமார், துணைத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் ,கலந்துகொண்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி