தென்காசி பிப்ரவரி 3
தென்காசி மாவட்டம் பண்பொழி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர்
M.திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய அவை பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்வேலுச்சாமி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் கருப்பன்னன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்
காளைச்சாமி திருக்கோவில் தலைமை எழுத்தர் லட்சுமணன் இளைஞரணி அமைப்பாளர் இசக்கி
மாவட்ட பிரதிநிதி வடகரை பாப்பா மயில் சுப்பையா கரிசல் குடியிருப்பு ஆதீனத்தேவர் முத்துராஜ் மற்றும் சமுதாய தலைவர்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர்.நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.