தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப் பெண்கள் பெற்ற தேர்வர்கள், தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர்.
மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட் டதாரி ஆசிரியர் நியமன தேர்வை டி.ஆர்.பி., நடத்தியது.
1500பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர்.
முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த் தேர்வில் 20 மதிப்பெண் பெற்றால் தான் முதன்மை பாடப்பிரிவு விடைத்தாள் மதிப்பிடப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. இந்நி லையில் வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன என தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.
‘தற்போது ஓரிரு வாரங்களுக்கு முன்பு கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதன்மை பாடத் தில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் பலர், தமிழ்த் தேர்வில் 20 மதிப் பெண்களுக்கும் குறைவாக பெற்றுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக தயாராகி முதன்மை பாடத்தில் அதிக மதிப்பெண்பெற்றும் ஆசிரியர் பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்த்தேர் வில் தேர்ச்சி மதிப்பெண் 20 என்பதை 18 ஆக குறைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்வர்கள் மனு அனுப்பி வருகின்றனர்.
தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
முதன் முறையாக தமிழ்த் தகுதித்தேர்வு நடத்தப்பட்டதால் வினாத்தாள் அமைப்பு விவரம் தெரியவில்லை. வழக்கமாக தமிழ் இலக் கணம், உரைநடை, அகர வரிசை, மொழியாக்கம் பகுதி வினாக்கள் இடம் பெறும்.
கொற்கையின் அரசனாகவும் புலவராகவும் இருந்தவர்? என்ற வினா கேட்கப்பட்டது விடை விருப்பங்களில் அ)செங்குட்டுவன் ஆ) நெடுஞ்செழியன் இ)கீரந்தையார் ஈ)அதிவீர ராம பாண்டியர் என வழங்கப்பட்டது. டி ஆர் பி உத்தேச விடைக்குறிப்பில் ஈ)அதிவீர ராம பாண்டியர் மட்டும் விடை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ஆசிரியர்களிடம் கலந்தாலோசித்து பார்க்கும் போது ஆ)நெடுஞ்செழியன் மற்றும் ஈ)அதிவீரராம பாண்டியர் என இரண்டுவிடையும் சரி என்கின்றனர். இவ்வாறான கேள்விகளை எல்லாம் தமிழில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
முன்கூட்டியே தெரிந்தி ருந்தால் அதற்கும் தயாரா கியிருப்போம்.
எனவேதமிழைத்தகுதித் தேர்வாக முதன்முறையாக எழுதியதை அடிப்படையாக கொண்டு தேர்வர்களுக்கு தமிழ்த் தேர்வு தகுதி மதிப்பெண்ணை 18ஆக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .அவ்வாறு குறைக்கும் பட்சத்தில் முதன்மை பாடத்தில் சரியான தகுதியுடைய தேர்வர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
