Headlines

நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது…

நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது...

நீலகிரி மாவட்டம் குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைப்போம் சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆலய வளாகத்தில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப மாலை அணிந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி ஐயனை தரிசனம் செய்தனர்.

இதற்கு முன்னதாக நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் ஐயப்ப விழாவுக்கு வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பங்குத்தந்தை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் எமரால்டு பகுதியில் நடைபெறும் ஐயப்பன் விளக்கு திருவிழா ஆனது எம்மதமும் சம்மதமே எனும் கோட்பாட்டை விளக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு செயல்படுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருந்தது.

மேலும் மாலையில் அய்யனின் தேர் பவனி வரும் பொழுது எமரால்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மும்மதத்தினரும் இணைந்து ஊர்வலத்தில் வருபவர்களுக்கு இனிப்பு வழங்கி நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய்களை தேர்பவணியில் உடைத்து அயனின் இந்த ஊர்வலத்திற்கு மும் மதத்தினரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

இவ்விழாவை பார்த்த சுற்றுவட்டார பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இதுபோன்ற விழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற வேண்டும் எனும் அளவிற்கு வியந்து பார்த்தனர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *