நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக மைனலை மடிதோரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள மைனலை கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திருமதி. மரு. தே. சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு சங்கத்தின் நோக்கம், சேமிப்பு,வைப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாகவும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விரிவாக எடுத்துத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் செயலாட்சியர்/கூட்டுறவு சார்பதிவாளர் திரு. ரா. கௌரிசங்கர் தனது திட்ட விளக்க உரையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் செயல்பாடுகள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் பிரச்சார பணிகள் குறித்தும் உறுப்பினர்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் திரு. வெங்கடசாலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியின் மூலமாக வழங்கப்படும் பல்வேறு விதமான கடன்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கடன் மேலாளர் திரு அணில், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர் திரு ஜெகநாதன், சங்கத்தின் செயலாளர் திரு. பி. ரவி, ஊர் தலைவர் திரு. பி. விஸ்வநாதன், சங்கத்தின் by a உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட செய்தியாளர் அருள்தாஸ்
