செப் 16, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பெரியகாடு கடற்கரை பகுதியில் நேற்று இரவு சோகமான நிகழ்வு ஒன்று நடந்தது.
பெரியகாடு சிலுவையார் தெருவைச் சேர்ந்த ரசீத்குமார் (27) என்ற சிறிய பாதிப்புடைய மாற்றுத்திறனாளி, கடற்கரைக்கு சென்று இயற்கை உபாதை கழிக்கும் போது திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
நீச்சல் தெரியாததால் அவர் தப்பிக்க முடியாமல் பலியானார்.
இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை தொடங்கினர்.
உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் கடலில் சிக்கிய ரசீத்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பெரியகாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி நகர நிருபர் – செய்லிஸ்.
