செப் 12, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பர் திணிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெனிட்டா மீது போலீசார் விசாரணை நடத்தினர். குளச்சல் ஏ.எஸ்.பி. ரேகா ஆர். நங்லெட் நேரில் விசாரித்தார்.
விசாரணையில், “தன்னைவிட குழந்தைக்கு கணவர் அதிக பாசம் காட்டியதால் கொலை செய்தேன்” என பெனிட்டா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
கருங்கல் போலீசார் பெனிட்டா ஜெயஅன்னாளை கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
