கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உப்பு மண்டி, கெம்படிகாலனி, அதை சுற்றி உள்ள பகுதிகளில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் ஏற்பாட்டில் “மாஸ் கிளீனிங்” பணிகள் நடைபெற்று.

மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கும் படி உத்தரவுயிட்டார்.

இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் மோகன் உதவி நகர் நல அலுவலர் பூபதி மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபாலன், மற்றும் தூய்மைப் பணியாளர்கள், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி 2 துணை செயலாளர் என.ஜே.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி-சம்பத்குமார் கோவைமாவட்டம்