Headlines

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகிர் வரவேற்புரையாற்றினார்.‌ உதவி தலைமை ஆசிரியர் ஜெய்சிங் சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் திருமலைசாமி, சம்பத்குமார் வஞ்சிமுத்து ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். நடைபெற்ற இவ்விழாவில் பள்ளியில் துப்புரவு செய்யும் தூய்மை பணியாளருக்கு தலைமையாசிரியர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த ருக்குமணி ஆசிரியைக்கும் , பட்டதாரி தமிழ் ஆசிரியை வசந்தராணி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டியில் பல்வேறு வகையான பிரிவுகளில் மாணவர்கள் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் விஜயன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் பள்ளியில் நடைபெற்ற முதல் பருவத்தேர்வு மற்றும் காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள், பள்ளிக்கு விடுமுறை வருகைதந்த மாணவர்களின் வருகைப்பதிவேடு, அதிக மதிப்பெண்கள் , மாணவர்களின் செயல்பாடுகள், ஆளுமை திறன் உள்ளிட்ட பல்வேறு விதமான அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர். மேலும் கற்றலில் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலமாக கற்றல் திறனை மேம்படுத்திய ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *