காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகிர்…