சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 நாளான இன்று உலக சுற்றுலா தினவிழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவானது திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் நடைபெற்றது.
உலக சுற்றுலா தின விழா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் அவர்கள் தலைமையில் சுற்றுலா கருத்தரங்கம்
மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பின்னர் திருமூர்த்திமலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உடுமலை அரசு கலைக்கல்லூரி, வித்யாசாகர் கல்லூரி, கமலம் கல்லூரி, யோகா கல்லூரி மாணவ மாணவியர்கள் , சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள யோகா கல்லூரியில் சுற்றுலா கருத்தரங்கம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவ்விழாவில் திருப்பூர் சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள் எஸ்.எம்நாகராஜ், குளோபல் பூபதி, மூர்த்தி, கோவில் அறங்காவலர் இ.ஆர்.சி.ஆர் ரவி, தளி பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா, சுற்றுலா ஆர்வலர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள்
கலந்து கொண்டனர்.