மதுரை மாவட்டத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் SQI பேராயத்தின் தமிழ்நாடு பேராயர் எம் .மாசிலாமணி தலைமையில், SQIநேஷனல் ஒருங்கிணைப்பாளர் பேராயர்.எம் ஜான் ஜெயராமன்,மதுரை மாவட்டபேராயர் கே.சி. டேனியல் இருவரது முன்னிலை தாங்கி நடத்தினார்கள்.
கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை SQI யின் ஆசிய பேராயர். B.ரமேஷ்பாலன் அவர்கள் கொடுத்தார்கள் இந்த விழாவில் அனைத்து தலைமை பேராயர்கள் , மண்டல பேராயர்கள் ,மாவட்ட பேராயர்கள், ரெவரன்ட், பாஸ்டர்ஸ், அனைத்து திருச்சபை விசுவாசிகள் ஊனமுற்றோர், பொதுமக்கள் சுமார் ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு அழைப்பாளராக எம்.சமய செல்வம் அவர்கள் தமிழ்நாடு உழைக்கு செய்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் ஃகிப்ட் புத்தாடை வழங்கப்பட்டது .
முடிவிலே மதுரை மாவட்டம் பேராயர் கே.சி.டேனியல் அவர்கள் நன்றி கூறினார்
அறுசுவை அன்பின் விருந்து கொடுத்து விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
