உடுமலை, அக்டோபர் 12-
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காளி
சாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர்.
தக்காளி சாகுபடிக்கு தக்காளி நாற்று , உரம் கூலி மற்றும் களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகும் நிலையில் உடுமலை தினசரி சந்தைக்கு தக்காளி பழங்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருந்து தக்காளி பழங்கள் அதிக அளவு வரத்து உள்ள நிலையில் தக்காளி கிலோ 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை ஆவதால் அறுவடை மற்றும் போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாக காரணத்தால் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலம்ம்பட்டி, நரசிங்கபுரம் பகுதிகளில் தற்பொழுது பழங்களை ஒட்டி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது .
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது.. உடுமலை பகுதியில் ஆண்டுதோறும் தக்காளி பழங்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தக்காளி பழங்கள் விலை குறையும் பொழுது இருப்பு வைக்க குளிர்பதனக் கிடங்கு இல்லாத காரணத்தாலும் மதிப்பு கூட்ட பொருள்கள் தயாரிக்க தேவையான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
