Headlines

நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை!பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?

நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை! பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?

அக் 18; கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் 39வது வார்டில் பட்டாரியார் நெடுந்தெருவின் நுழைவாயிலில் ஆண்டுகளாக நிலைத்து வந்த பழமையான கருங்கல் மதில் சுவர், சிலரின் சுயநலத்திற்காக இடிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இச்செயல் நடைபெற்றதாக ஆதரவாளர்கள் கூறினாலும், இருபுற சுவர்களும் அல்லாமல் ஒரே பக்க சுவர் அதுவும் வணிக கிடங்கு அருகிலுள்ள பகுதி மட்டும் இடிக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வணிக கிடங்கு, 39வது வார்டின் மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்தின் உறவினர் என்பதால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இச்செயல் நடந்ததா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

மேலும், ஏற்கனவே மாமன்ற உறுப்பினரின் கணவர் மீது பல பண மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை கருத்தில் கொண்டால், வணிக கிடங்கு உரிமையாளரிடமிருந்து பணம் பெற்றே சுவர் இடிப்பு நடந்ததா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தீவிரமாக பேசப்படுகிறது.

பட்டாரியார் நெடுந்தெருவின் அடையாளமாக இருந்த கருங்கல் மதில் சுவர் இன்று தன் கம்பீரத்தை இழந்தது, அதேசமயம் மக்களின் மனதில் கேள்விகள் எழுந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்,” என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *