கணபதி ராஜவீதி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. சங்கேத் பல்வந்த் வாகே இ.ஆ.ப, உதவி ஆட்சியர் திரு. பிரசாத் இ.ஆ.ப, மாமன்ற உறுப்பினர் திருமதி. சுமா, பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் திரு. சங்கர், துணைப் பொது மேலாளர்கள் திரு. பால்வண்ணன், திரு. முகமது மறைக்காயர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கணபதி பகுதி பொறுப்பாளர் செ. ராமச்சந்திரனும் கலந்து கொண்டார். மேலும் இந்த மக்கள் நலத் திட்டம் கணபதி பகுதி மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும்,
இத்திட்டத்தை கொண்டு வந்த கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு கணபதி பகுதி மக்கள் சநன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத் குமார்
