கன்னியாகுமரி, டிசம்பர் 13:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இன்று (13.12.2025) புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.பா.தில்லைவேல் அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான 4694 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் பெல் நிறுவனத்தை சார்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 11.12.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்தவித சுணக்கமும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென சரிபார்ப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.பா.தில்லைவேல், அவர்கள் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.பூங்கோதை, தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.வினோத், உசூர் மேலாளர் (பொது) திரு.சுப்பிரமணியன், பெல் நிறுவன பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் திரு.வீரவர்க்கீஸ் (தி.மு.க), திரு.இராமகிருஷ்ணன் (தி.மு.க), திரு.ஜெயகோபால் (அ.இ.அ.தி.மு.க), திரு.விஜயகுமார் (பி.ஜே.பி), திரு.பன்னீர் செல்வம் (இ.தே.காங்), திரு.பிரபு (நா.த.க), திரு.மனோஜ் (என்.பி.பி), திரு.எஸ்.பி.மணி (ஆம்ஆத்மி), அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்
