திருநெல்வேலி,நவ.6:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.6] நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். ” பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!” என்று, மனுதாரர்களிடம், மாநகர காவல் ஆணையர் “உறுதி” அளித்தார். இந்த கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர்கள் மேற்கு V.கீதா, கிழக்கு S.விஜயகுமார் ஆகியோரும், மாநகர காவல் ஆணையருடன், பங்கேற்றனர்.