தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!
திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “ஊட்டச்சத்தை உறுதி செய்”- 2-ஆம் தொகுப்பு தொடக்க விழா, இன்று [நவ.25] நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான “ரூபி” ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி சார் சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்,”குத்து விளக்கு” ஏற்றி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தாய்மார்களுக்கு “ஊட்டச்சத்து” பெட்டகத்தினை, சட்டமன்ற உறுப்பினர்…
