திருநெல்வேலி, நவ.4:- திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.9] மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் ஆலுவலரிடம்?அளிப்பதற்கான வசதிகளும், செய்யப்பட்டிருந்தன. மேலும் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை மனுக்கள், உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு அருகில் அமைந்துள்ள வாழ்வாதார வழிகாட்டி மையத்திற்கு அனுப்பி, தீர்வு காணப்பட்டது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாக்கியலட்சுமி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.