இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 11500 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழுந்தார்.
இவர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள கடை ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், கட்சி யாரிடம் கூட்டு வைக்கவில்லை எனவும், தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை, படித்தவர்களை வேட்பாளராக முன்நிறுத்திய போது, அதை சீமான் மறுத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.
அப்போது அங்கே வந்த நாம் தமிழர் கட்சியினர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர், அப்போது நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ் என்பவர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாணியம்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி குருதிப்படை பாசறை செயலாளர் நாகராஜன், கட்சியில் இருந்து விலகிய திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகளை அவதூறாக பேசியதாகவும், தன்னை தாக்கியதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட நிருபர் : அப்சர் மர்வான்