உடுமலை
நவம்பர் 06.
உடுமலை நவ.6 ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து இரை தேடி வெளியேறும் குரங்குகள் கிராமப்புறங்களில் தஞ்சம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் வழி தவறி வந்த ஜோடி குரங்குகள் முக்கோணம் பகுதியில் சுற்றி திரிகின்ற. அவை இரை மற்றும் தண்ணீர் காக அலைந்து திரிந்த வண்ணம் உள்ளன.
மேலும் இந்த ஜோடி குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வருகின்றன.
மேலும் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுப்பன்றி மற்றும் மயில்கள் இன்று ஆயிரக்கணக்கில் பல்கி பெருகி விவசாயிகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது குரங்குகளும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளது எனவே அடிவாரப் பகுதிக்கு வருகிற குரங்குளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
