வாணியம்பாடி,மே.1- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகளுடன் தாய் கரடி என நாண்கு கரடிகள் மேல்மாமுடி மானப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது.

அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி பறித்துக்கொண்டு இருந்த மணிமேகலை என்ற பெண்ணை வலது கையில் கரடி தாக்கியது.

அப்போது அங்கு உடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இரண்டு குட்டி கரடிகள் ஒரு பெரிய கரடிகள் மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்ற நிலையில் பெரிய தாய்கரடி மட்டும் பேட்டராயன் வட்டம் பகுதியில் உள்ள ராமி என்பவரின் வீட்டின் வளாகத்துக்குள் புகுந்து கொண்டது.

அங்கு இருந்த ராஜி என்பவரையும் கரடி தாக்கியது கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றுச் சுவர் மீது ஏறி குதித்த கரடியின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய பின்னர் பூச்செடிக்குள் தஞ்சம் அடைந்தது கரடி.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர்,
வலை அமைத்து கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கரடி படுத்திருந்த இடத்தில் இருந்து அதனை அப்புறப்படுத்த வனத்துறையினர் நீண்ட நேரமாக முயற்சி செய்தனர். மேலும் வலையை விரித்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சுற்றுச்சுவர் மீது ஏறிய கரடி திடீரென திரும்பவும் கீழே குதித்து அங்கிருந்து தப்பியது.
அதன் பிறகு சுற்றுச்சுவர் ஒரு பகுதியில் பெரிய அளவில் கூண்டை வைத்து கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அந்த முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டும் வதற்காக முயற்சி செய்தபோது கரடியானது மெல்ல மெல்ல நகர்ந்து கூண்டுக்குள் சிக்கியது.
உடனடியாக வனத்துறையினர் கரடியை கூண்டுக்குள் அடைத்து மீண்டும் வனப்பகுதிக்கு விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
ஊருக்குள் புகுந்து வீட்டுக்குள் அகப்பட்ட கரடியை சுமார் 3 மணி நேரம் போராடி கரடியை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
