வனத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, சுமார் 20 டன் எடையில் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மூன்று லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு கேரளா மாநிலத்திற்கு கடத்த முயற்சிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனத்துறை குழுவினர் திடீர் சோதனை நடத்தி, அந்த வாகனங்களை மடக்கிப்பிடித்துள்ளனர்.
எனினும், பாதுகாக்கப்பட்ட கடல் உயிரினங்களை டண் கணக்கில் வேட்டையாடியவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், கடல் சூழல் மற்றும் அரிய இன மீன்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ், கேமராமேன் ஜெனீர்.
