திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சண்முக நதி, நெய்க்காரப்பட்டி, பெருமாள் புதூர், வழித்தடங்களிலும் பழனியில் இருந்து சண்முக நதி, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, வழித்தடங்களிலும் பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி, சண்முகம் பாறை, புளியம்பட்டி, ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது.

பழனி பேருந்துநிலையத்தில் இருந்து புதிய பேருந்துகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பழனி நகர மன்ற தலைவர், பழனி நகர் மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவினை பழனி போக்குவரத்துக் கழக மேலாளர் ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.