உடுமலை, நவம்பர் : 27
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
