தென்காசி ஆகஸ்ட் 16
தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட அருவி சிற்றருவி ஆகிய அருவிகள் இங்கு உள்ளன.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது தற்போது தொடர்ந்து விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக மிகுந்த வேதனையோடு திரும்பிச் செல்கின்றனர்.
கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இப்பகுதி முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது.
சீசன் முடிவுற்றாலும் தொடர்ந்து அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் நீர் வரத்து உள்ளதால் பயணிகளின் வரத்து சற்று அதிகரித்தே காணப்படுகிறது.
குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் கிடைக்கப்பெறும் அரிய வகை காட்டு பழங்களான ரம்புட்டான் மங்குஸ்தான் ஸ்டார் பழம் பேரிச்சம் பழம் துரியன் பழங்கள் ஆகியவை அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளது.
அடுத்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் விரைவில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஏக்கம் அனைத்து சுற்றுலா பயணிகள் மனதிலும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
தற்போதைய கால சூழ்நிலையில் மழை விட்டு விட்டு பெய்து வருவது இப்பகுதி மக்களிடையே அதிக சந்தோஷத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் : முகம்மது இப்ராஹிம்
