உடுமலை, நவம்பர் : 27.
உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் தொழில்துறையினர் பயனடையும் வகையில் கடந்த 1944 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது.
இதை அடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு சேவை செய்ய என்று கம்பீரத்துடன் வலம் வந்து தீயணைப்பு வாகனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழுதடைந்தது.
இதனை அடுத்து புதிய வாகனமும் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு வரவில்லை இதனால் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
இதன் காரணமாக தற்போது ஒரு வாகனம் மற்றும் சுமார் 19 பணியாளர்களை வைத்து நிலைமையை சமாளிக்கும் சூழல் நிலை வருகிறது. அத்துடன் அவசரகால தேவைக்கு உடனடியாக கை கொடுக்க முடியாத நிலை தான். நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது அதன்படி திருமூர்த்தி அணை அருகே ஒரு மரம் ஒன்று சாய்ந்த தகவல் கிடைத்து வீரர்கள் அங்கு விரைந்தனர். இதற்கிடையில் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது ஆனால் வாகனம் வேறு பணிக்கு சென்று விட்டதால் தீயை உடனுக்குடன் அணைக்க இயலாமல் பெருத்த சேதம் ஏற்பட்டது இதனால் கடை உரிமையாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தான் உள்ளது .ஆனால் வாகனம் இருந்திருந்தால் தீயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம் வாகனம் இல்லாத தகவல் கிடைத்து மடத்துக்குளம் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு அங்கிருந்து வாகனம் வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது.
கூடுதல் வாகனம் அவசியம் அதற்குள் தீ மளமள என பரவி கட்டுக்கடங்காமல் போனது இதனால் அக்கம் பக்கம் கடை வைத்துள்ள நபர்கள் தங்களுக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டு விடுமோ என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். எனினும் சிறிது நேரத்தில் மடத்துக்குளம் மற்றும் திருமூர்த்தி அணைப்பகுதியில் இருந்து திரும்பிய இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது இதை அடுத்து தீ அணைக்கப்பட்டது.
அதன் பின்னர் தான் அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த தீ விபத்து சம்பவம் இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணியாகும் கூடுதல் வாகனமும் பணியாளர்களும் வாகனமும் இருந்தால் இந்த விபத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி சேதத்தை குறைத்திருக்கலாம் ஆனால் அலட்சிய போக்கால் பாதிப்பு அதிகமானது வேதனை அளிக்கிறது இந்த சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதலாக தீயணைப்பு வாகனத்தையும் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் இதனால் இடர்பாடுகளை கால தாமதம் இன்றி எதிர்கொண்டு இழப்புகளை தவிர்க்கலாம் என்றனர்.
