Headlines

உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் கண்ணாடி புத்தூர், நீலம்பூர், குமரலிங்கம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அமராவதி அணை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி நெற்பயிர்கள் நடவு செய்தனர் நடவு செய்து 20 நாட்களுக்குள் நன்றாக வளரும் நிலையில் தற்பொழுது வளர்ச்சித் திறன் பாதித்து கருகி வருகின்றது இதுகுறித்து உரக்கடை கடையில் புகார் செய்தால் விவசாயிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் ,எங்கள் மருந்தால் பாதிப்பு இல்லை எனவும் இழப்பீடு வழங்கவும் மறுத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது.. மடத்துக்குளம் பகுதியில் விவசாயிகள் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்து வருகின்றோம் தற்பொழுது உரக்கடையில் வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்தால் தற்சமயம் நெற்பயிர்கள் அனைத்தும் சேதம் ஆகியுள்ளன. குறிப்பாக உரம் விதை இடு பொருட்கள் என ஏக்கருக்கு 25 ஆயிரம் விவசாயிகள் செலவு செய்துள்ள நிலையில் 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி சேதம் அடைந்து உள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட உரக்கடை நிறுவனம் இழப்பீடு தர மறுத்து வருகின்றது.எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறையினர் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் தரமான உரம் விதை பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்தார்களா என தெரியவில்லை ஆகையால் இதற்கு முழு பொறுப்பு வேளாண்மை துறையினர் தான் எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் பாதிக்கபட்ட விவசாயிகள் ஓன்று திரண்டு தனியார் உரக்கடை மற்றும் வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

உடுமலை. : நிருபர்: மணி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *