தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் சோப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தியாகதுரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்றார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கா.கார்த்திகா அவர்கள் கலந்து கொண்டு தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுவரொட்டி வரைதல் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த 50 பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி கலந்து கொண்டனர். நடுவர்களாக ஓவியா ஆசிரியர்கள் மணமோஹன ஐவகர் ,செல்லவேல் ஆகியோரும் சோப்பு தயாரித்தல் பயிற்சியினை ஆசிரியை நூருனிஷாஅவர்கள் செய்து காண்பித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செல்வராஜ் ,ஸ்ரீராம், செந்தில்நாதன், தன செல்வம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பல கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறைவாக பரிசும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது. நிறைவாக தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
GB. குருசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர்