கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார்.
முக்கிய பணிகள்:
🔹 வடிகால் தூர்வாரும் பணிக்காக JCB, லாரி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் அழைக்கப்பட்டு, நவீன வசதிகள் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
🔹 பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பக்கவாட்டுப் பகுதிகளும் துரிதமாக சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் தனபாலன்,
பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
