Headlines

திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி,அக்.28:-

திருநெல்வேலி மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளில் நடைபெற்று வரும், “தாமிரபரணி” கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், 423.13 கோடி மதிப்பில், களக்காடு நகராட்சி, பணகுடி, வடக்கு வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, திசையன்விளை, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய, 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், இன்று (அக்டோபர்.28) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், நடைபெற்றது. தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர் )மு. அப்பாவு, தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- “மொத்தம் 423.13கோடி ரூபாய் மதிப்பிலான, களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளுக்கெனசேரன்மகாதேவி பகுதியில், “தாமிரபரணி” ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, “கங்கனாங்குளம்” பகுதியில் உள்ள, திருவிருத்தான் புள்ளியில், நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, “பாதுகாக்கப்பட்ட குடிநீர்” விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கென 24 இடங்களில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், கட்டப்ப்பட்டு வருகின்றன. 80 சதவிகித பணிகள், முடிவடைந்துள்ள நிலையில், மீதியுள்ள 20சதவிகித பணிகளும், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் (நவம்பர்) முதல், இந்தப்பணிகளில் கூடுதலாக ஆட்களை ஈடுபடுத்தி, கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளை, விரைவாக முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மிகுந்த ஒத்துழைப்பு தர வேணடும். இதுபோல, 83 1 ஊரக குடியிருப்பு களுக்கு, மொத்தம் 605 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளுக்காக, முன்னீர்பள்ளம் பகுதியில், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுககப்பட்டு, சிங்கிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு, கொண்டு செல்லும் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், பிரண்டமலை பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் சோதனை பணிகள், நடைபெற்று வருகினறன.

இதில் 91 சதவிகிதப்பணிகள் முடிவடைந்துள்ளன., அனைத்துப்பணிகளும் கூடுதல் பணியாளர்களுடன் விரைந்து முடிக்கப்பட்டு, குடிநீர்த் திட்டப்பணிகளை, வெகுவிரைவில் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்!”.

இவ்வாறு, சபாநாயகர் அப்பாவு, குறிப்பிட்டார். துறைசார்ந்த அலுவலர்கள் இந்த கலந்தாய்வில், கலந்து கொண்டனர்.

முன்னதாக, சபாநாயகர் அப்பாவு, பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட அளவிலான “கலைத்தருவிழா” போட்டிகளை, “குத்துவிளக்கு” ஏற்றி, துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *