Headlines

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருநெல்வேலி, நவ 20- பொதுமக்களை மழைகால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள, SDRF பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு உபகரணங்களை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இன்று [நவ.20] திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து, நேரில் பார்வையிட்டார்.

வடகிழக்கு பருவ மழை, தற்போது தீவிரமடைந்து வருவதால், மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து, பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடங்களை தேடிச்சென்று, உதவிகள் செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட, பேரிடர் மீட்பு குழுக்களை (Tamil Nadu State Disaster Response Force), எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், அறிவுறுத்தினார். இக்குழுவில், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் வாய்ந்த, காவலர்கள் உள்ளனர். மழை காலங்களில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும் போதும், வெளியில் செல்லும் போதும், கவனமுடன் இருக்கவும், ஆறு, குளங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதை, முற்றிலும் தவிர்க்குமாறும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *