Headlines

புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!

புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” C.ராபர்ட் புரூஸ் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, புதுடெல்லியில் உள்ள, அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில், ரயில்வே துறை சார்பாக நிறைவேற்றப்பட வேண்டிய, பல்வேறு, திட்டப்பணிகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தி, கோரிக்கை மனு வழங்கினார். அவர் அளித்துள்ள மனுவில், குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளுள் சில வருமாறு:-
ரயில் சேவைகள் அதிகரிப்பு மற்றும் நீட்டிப்புகள். *மதுரை-பெங்களூர் 20671 “வந்தே பாரத்” ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டிப்பதோடு திருச்சி செல்லாமல் நேரடியாக, திருநெல்வேலியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக, இயக்கிட வேண்டும்!
*திருநெல்வேலி – சென்னை செல்லும் 20666 “வந்தே பாரத்” ரயிலில், கூடுதலாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட, வேண்டும்! *திருவனந்தபுரம்- மங்களூர் விரைவு ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்!
*20683/20884 செங்கோட்டை-தாம்பரம் எஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு, மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுவதற்கு பதிலாக, அனைத்து நாட்களிலும் இயங்கச் செய்ய வேண்டும்! *இதுபோல 22657/22658 நாகர்கோவில்-தாம்பரம் ரயில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படுவதற்கு பதிலாக, தினந்தோறும் இயக்கப்பட வேண்டும்!
*கன்னியாகுமரி- ஹவுரா ரயில் [12665/66] தற்போது வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, தென் பகுதியிலிருந்து, கிழக்குப் பகுதிகளுக்கு செல்வதற்காக 12663/64- திருச்சி-ஹவுரா மற்றும் 22603/04 கரக்பூர்-விழுப்புரம் ஆகிய இரு ரயில்களையும், திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்!. * 06248/33- நாகர்கோவில் கொச்சுவேலி விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்
*06340 நாகர்கோவில்- கொச்சுவேலி பயணிகள் ரயிலை- திருநெல்வேலி வரை நீட்டித்து, சர்குலர் ரயிலாக இயக்கிட வேண்டும்!
*திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக் கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கொல்லத்திற்கு, மீட்டர்கேஜ் ரயில் பாதை. இருந்தபோது, காலையிலும், மாலையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டதும், அவை நிறுத்தப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் இயக்கிட வேண்டும்!
ரயில் நிறுத்தங்கள்:- காவல்கிணறு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அல்லது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இவற்றில் ஏதாவது ஒன்று, 18321/32 நாகர்கோவில்- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், 17235/36 நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிற்கு நிறுத்தம் அளிக்கப்பட வேண்டும்!-இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு, ரயில்வே அமைச்சரிடம் ராபர்ட் புரூஸ் எம்.பி.கோரிக்கை வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *